ஜி.கே.என்.எம். வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.எஸ்.முத்துசாமி, கோவை மாவட்ட ஆட்சியாளர் கிராந்தி குமார், கே.என்.சி. அறக்கட்டளையின் தலைவர் பதி மற்றும் துணைத் தலைவர் ஆர்.கோபிநாத் மற்றும் கே.என்.சி.அறக்கட்டளையின் அறங்காவலர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு மற்றும் அறங்காவலர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சிறப்பான மருத்துவ சேவை அளிப்பதில் முன்னோடியாக திகழும் கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை, தற்போது நவீன மருத்துவ வசதிகளுடன் 3,30,000 சதுர அடியில் அமைந்துள்ள ஒருங்கிணைக்கப்பட்ட வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தை திறந்துள்ளது. நவீன மருத்துவ தொழில்நுட்ப ரீதியாகவும், மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழுக்களின் மூலமாகவும் இந்திய அளவில் வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் மத்தியில் தனி முத்திரையை பதித்துள்ளது ஜி.கே.என்.எம்.மருத்துவமனை.
இந்த வெளிநோயாளிகள் மருத்துவ மையம் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் செயல்படுகிறது. உடல் நலனை மதிப்பிடுதல், நோய்களை கண்டறிதல், ஆய்வக வசதிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை வசதிகள், யோகா, நேச்சுரோபதி. அக்குபன்ச்சர் மற்றும் ஹோமியோபதி. நோயாளிகளின் வசதிகளை கருத்தில் கொண்டும் மற்றும் மேம்பட்ட மருத்துவ சிகிச்சையினை அளிப்பதற்கு ஏதுவாகவும் இந்த மருத்துவ மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி அவர்கள் இது குறித்து கூறியதாவது, அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையிலும், உயர்ந்த தரத்திலும் மற்றும் பொளாதாரத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களும் பயன்பெறும் வகையிலும் இந்த மருத்துவமனை செயல்படும். எங்ளது வேரூன்றிய மருத்துவ வரலாறு இந்த வெளிநோயாளிகள் மருத்துவ மையத்திலும் பிரதிபலிக்கிறது. இந்த மையம் எங்களுடையபயணத்தில் ஒரு மைல் கல்லாகும். இது நாடு முழுவதிலும் வெளிநோயாளிகளுக்கான சிகிச்சையில் ஒரு முன்னோடியாக உள்ளது. இந்த நவீன மருத்துவமனையினை பயன்படுத்திக்கொள்ள
ஜி.கே.என்.எம். மருத்துவமனை பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
ஜி.கே.என்.எம்.மருத்துவமனை 1952-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஜி.கே.என்.எம். மருத்துவமனை பிரசவம் மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மருத்துவமனையாக 50 படுக்கைகளுடன் மருத்துவ சேவையினை செய்து வந்தது. பின்னர் 650 படுக்கைகள் கொண்ட பல்துறை சிறப்பு மருத்துவமனையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 72 ஆண்டுகளுக்கும் மேலாள நாடு முழுவதிலும் இருந்து வரும் நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சேவையினை வழங்கி வருகிறது ஜி.கே.என்.எம்.மருத்துவமனை.