• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மறுதணிக்கைக்கு போகும் கோப்ரா திரைப்படம்

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களுக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.

இப்படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துவருகிறார்.உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையைப் பெற்றிருக்கிறது.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தப்படத்தைத் தணிக்கைக்குழுவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். தணிக்கைக்குழுவில் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

இதனால், படத்தை விலை கொடுத்து வாங்கியவர்கள் பதறிப்போய் இருக்கிறார்களாம். ஏனெனில் ஏ சான்றிதழ் படங்களைத் திரையிடுவது முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வரை எல்லாவற்றிற்கும் ஏற்கெனவே பேசப்பட்ட விலையைக் கொடுத்தால் கட்டுப்படியாகாது என்பது அவர்கள் கணக்கு.

இதனால் விலையைக் குறைக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.

எனவே சுமார் பத்துகோடி வரை நட்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறதாம்.

இதன்காரணமாக, விலைக்கு வாங்கியவர்களிடம் நாங்கள் மேமுறையீடு செய்து யு அல்லது யுஏ சான்றிதழ் பெற்றுவிடுவோம் அதுவரை பொறுத்திருங்கள் என்று சொல்லியிருக்கிறதாம் படக்குழு.

அப்படத்தை வாங்கியவர்கள் என்ன நடக்குமோ? என்கிற பதட்டத்தில் இருக்கிறார்களாம்.