• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வலையபட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

ByN.Ravi

Jul 31, 2024

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வலையப்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயச்சந்திரன் வரவேற்றார்.

இந்த முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வாழ்வாதார கடன் உதவிகள், காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை, தமிழ்நாடு மின்சார வாரியம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை உள்ளிட்ட 13 துறைகளை சேர்ந்த அதிகாரிகளின் பல்வேறு சேவைகள் குறித்து தனித்தயாக அரங்கு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டது. இதில் வலையபட்டி சத்திர வெள்ளாளப்பட்டி கோடாங்கிபட்டி சேந்தமங்கலம் சுந்தரம் பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த சுற்று வட்டார பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், யூனியன் ஆணையாளர்கள் வள்ளி, கலைச்செல்வி வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன் சமூக நலத்திட்ட தாசில்தார் மின்வாரிய பொறியாளர் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.