• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஜிடி நாயுடுவின் சிலையை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்..,

BySeenu

Mar 10, 2026

கோவை வ.உ.சி மைதானத்தில் ஜிடி நாயுடுவின் சிலையை முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், வ.உசி மைதானத்தில் ரூ.50இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் விஞ்ஞானி ஜி.டி நாயுடு திருவுருவச் சிலையைக் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு தந்த அறிவியல் மாமேதைகளில் ஒருவரும், இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவரும், கல்வியாளராகவும், எளியோருக்கு உதவும் நற்குணம் வாய்ந்தவராகவும் விளங்கிய ஜி.டி நாயுடு அவர்களுக்கு கோயம்புத்தூரில் ரூ.50இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று அறிவித்தார்.அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் ஜிடி நாயுடு அவர்களுக்கு சிலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் முடிவடைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திருவுருவச் சிலையைக் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் ஜிடி நாயுடு குடும்பத்தினர், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.