மாமன்னர் மருதிருவர்களின் வாரிசுதாரரும், சிவகங்கை நகர்மன்ற தலைவருமான சி.எம்.துரை ஆனந்த் தமிழக முதல்வர், துணைமுதல்வருக்கு நன்றி செலுத்தினார்.
சிவகங்கை நகர்மன்றத் தலைவரும், மாமன்னர் மருதிருவர்களின் வாரிசுதாரருமான சிஎம். துரை ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;-
சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மாமன்னர் மருதிருவர்களின் வாரிசுதாரர் என்ற அடிப்படையிலும், அனைத்து அகமுடையர் சமூக சங்க கூட்டமைப்பின் சார்பாகவும், நான் (சிஎம்.துரை ஆனந்த்) மாண்புமிகு தமிழக முதல்வரிடம் மாமன்னர் மருதிருவர்களின் குரு பூஜை விழாவை தினசரி நாளிதழ்களில் அரசு சார்பில் விளம்பரப்படுத்துமாறு நான் வைத்த கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வர், துணை முதல்வர் பரிசீலனை செய்து உத்தரவிட்டதையடுத்து மாமன்னர் மருதிருவர்களின் 223 வது குருபூஜை நாளான கடந்த 24-10-2024 அன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட நினைவு மண்டபத்தில் அரசு சார்பில் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித்,இ.ஆ.ப., தேசிய கொடியினை ஏற்றி வைத்தும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்,

அதனைத் தொடர்ந்து மாண்புமிகு முதல்வர், துணை முதல்வர் ஆணைக்கிணங்க ஏழு அமைச்சர் பெருமக்கள் அரசு சார்பில் மாமன்னர் மருதிருவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த மகிழ்வான தருணத்தில் மருதிருவர்களின் வாரிசுதாரர் என்ற வகையில் சிஎம்.துரை ஆனந்த ஆகிய நான் பதிவு செய்ய விரும்புவது என்னவென்றால், சுதந்திர இந்தியாவின் தியாகிகள் மாமன்னர் மருதிருவர்களின் 223 வது நினைவு தினத்தை (குருபூஜையை) வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாளாக்கிய தமிழக முதல்வர், துணை முதல்வர் உளமார்ந்த கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும்,என்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த மாண்புமிகு கூற்றவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களுக்கும், மேலும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், மக்கள் செய்தித்துறை அமைச்சர் மு.பே.சாமிநாதன் அவர்களுக்கும், கோடான கோடி நன்றியினை தெரிவித்தார்.
