விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டி கிராமத்தில் சிவகாசி ஸ்டேட் பேங்கில் இருந்து ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, எட்டக்காபட்டி,எதிர் கோட்டை, உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராம மக்களும் மற்றும் அரசு ஊழியர்களும் பணவரவுகள் செய்து வந்தனர். இந்நிலையில் திடீரென ஏடிஎம் மையம் செயல்படாது என சிவகாசி ஸ்டேட் வங்கியில் இருந்து அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. அருகில் வேறு ஏடிஎம் மையம் இல்லாததால் பணம் எடுக்க முடியாமல் இப்பகுதியை சேர்ந்தவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் மீண்டும் ஏடிஎம் மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.