• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பொம்மை, காளை உருவம் கண்டுபிடிப்பு

ByA.Tamilselvan

Jul 21, 2022

வெம்பக்கோட்டையில் நடை பெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் அழ கிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண்ணாலான திமிலுடன் கூடிய காளை உருவம் மற்றும் அணிகலன்களுடன் கூடிய பெண் உருவ பொம்மை ஆகி யவை கண்டறியப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே உச்சிமேட்டில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் அகழ்வா ராய்ச்சிப் பணிகள் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் முன்னதாக சுடு மண்ணால் ஆன பகடைக்காய், தக் களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட் கள் ஆகியவை கண்டறியப்பட்டுள் ளன. இந்நிலையில் ஆறாவதாக தோண்டப்பட்டுள்ள புதிய அகழாய்வு குழியில் அழகிய வேலைப்பாடுகளு டன் கூடிய சுடு மண்ணால் ஆன திமி லுடன் கூடிய காளை உருவம் மற்றும் பெண் உருவ பொம்மை கண்டெடுக் கப்பட்டுள்ளது. பொம்மையின் கழுத் தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஆபரணங்கள் இருக்கும் வகை யில் அமைந்துள்ளது. இதன்மூலம், இப்பகுதியில் வாழ்ந்த தொன்மையான மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாகவும் வீரத்தை பறைசாற் றும் விதமாக காளைகளை வடிவ மைத்து உள்ளார்கள் எனவும், அழகிய வடிவுடன் கூடிய பெண் உருவ பொம்மை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றையும் உருவாக்கியுள்ள னர் எனவும் தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.