• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

“ஷ்”தம்பிக்கு எகிறும் சினிமா சான்ஸ்..! அப்போ! அண்ணனின் நிலை?

“ஷ்” நடிகர் தமிழ் சினிமாவிலேயே அரை டஜன் படங்களை அடுக்கி வைத்திருப்பது அனைவரும் அறிந்ததே! இந்நிலையில், தற்போது பிற மொழி படங்களில் நடிக்க அவருக்கு பல சான்ஸ்கள் குவிந்து வருவதால், தம்பியின் கவனமும் அந்தப்பக்கம் திரும்பியுள்ளதாம்! மேலும், சம்பளமும், இங்கு கிடைப்பதை விட, அதிகம் என்பதால் தனது மார்க்கெட்டை உயர்த்த நடிகரும் முடிவு செய்துள்ளாராம்! இதனால் அண்ணன் மிகுந்த வருத்தத்திலும், குழப்பத்திலும் உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது! குழப்பத்திற்கான முக்கிய காரணம், பிற மொழி படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கும் தம்பி நடிகர், அண்ணன் படத்துக்கு அல்வா கொடுத்துவிடுவாரோ என்கிற பயம்தான் என்கிறார்கள்!
.
முந்தைய காலத்தில், “ஷ்” தம்பிக்கு ஏணியாக அண்ணன் இருந்தார்! தற்போது அந்த நிலை தலைகீழ்! இந்நிலையில், தற்போது அண்ணனை காப்பாற்றும் தோணியாக தம்பி மாறுவார் என அண்ணன் பெரும் நம்பிக்கையுடன் இருந்து வந்தார். பல வருடங்களாக அவரும் கேட்டு வருகிறாரே என இரு படங்களில் நடிக்க ஓகே சொல்லி இருந்தார் அன்புத் “தம்பி”.

தம்பி சம்மதம் சொல்லிட்டாரே என அடுத்தடுத்து இரு படங்களின் அறிவிப்புகளையும் அண்ணன் இயக்குநர் ஏற்கனவே அறிவித்து விட்டார். அதில், அவரது கனவு படம் ஒன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோலிவுட் ரசிகர்களும் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் செய்தியை கேட்கவே பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ஆனால், தம்பிக்கு திடீரென கோலிவுட் படங்களை விட பிற மொழி படங்களில் அதீத ஈடுபாடுகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது கனவு பயணத்திற்காக சமீபத்தில் மிகப்பெரிய தியாகத்தையே செய்ய ஒல்லி நடிகர் முன் வந்தது ஒட்டுமொத்த குடும்பத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதில், அண்ணன் இதயத்தில் தான் பெரிய இடியே இறங்கி உள்ளதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே ஆரம்பித்த படத்தையே தம்பி எப்போது முடித்துக் கொடுப்பார் என தெரியாமல் புலம்பித் தவிக்கும் அண்ணன் தற்போது பிற மொழி படங்களில் அதிக வருமானம் வருவதால் கால்ஷீட்களை வாரி வழங்கி வருவதால் அந்த கனவு படத்தை அப்படியே கை விட்டு விட வேண்டியது தான் என்கிற முடிவுக்கே வந்து விட்டார் என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்.

ஆனால், ஒல்லி நடிகர் தான் கமீட் பண்ண எதையும் விட்டு விட மாட்டார் என்றும் அவர் பிற மொழிகளில் பிசியானாலும் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பார் என்றும் ஆல்ரவுண்டராக செயல்பட்டு அண்ணனுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிச்சயம் காப்பாற்றுவார் என்றும் கூறுகின்றனர், அவரது தோழமைகள்! என்ன நடக்கப் போகுதுன்னு நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.