• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக கிறிஸ்துமஸ் வாழ்த்து

ByKalamegam Viswanathan

Dec 23, 2023
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள சி.எஸ்.ஐ.இராக்லாந்து ஞாபகார்த்த ஆலயத்தில், இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக, அங்குள்ள தலைவர்களுக்கு கிறிஸ்துஸ் வாழ்த்து தெரிவித்து அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, இந்திய தேசியலீக் கட்சியின் சார்பாக, இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர், சிவகாசி சி.எஸ்.ஐ இராக்லாந்து ஞாபகார்த்த ஆலயத்திற்கு நேரில் சென்று, தலைமை குரு டேவிட்சன் மற்றும் உதவிகுரு தவராஜ் ஆகியோரை சந்தித்து, இனிப்பு வழங்கி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்து அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், ஆலயத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் ஸ்டீபன், மகேந்திரன், அதிசியம், சீமான்துரை, கிறிஸ்துமஸ் தாத்தா, இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் தொழில்அதிபர் செய்யது இப்ராஹிம் முஹம்மதுகான், முஹமதுகாசிம் இப்ராஹிம் காதர்ஷா மாபுபாட்ஷா திலிபன் முத்துவிலாசா உடன் இருந்தனர்