மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 15 க்கு மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளது இந்த ஆலயங்களில் நள்ளிரவு முதல் கிறிஸ்மஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

அதிலும் குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை அனைத்து சபைகளிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
ஆர் சி, சி எஸ் ஐ ,ஏ ஜி, டி இ எல் சி, மாரநாதா உள்ளிட்ட சபைகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.




