கிறிஸ்துமஸ் விழா தென்னிந்திய நடிகர் சங்கம் மதுரை ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் கிறிஸ்துமஸ் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, ஒளிப்பதிவாளர் துளசி தாசன், எழுத்தாளர் விவேக் ராஜ், சிவா, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, வழக்கறிஞர் சோனு (எ) ப்ரியதர்ஷினி, மாமி, குழந்தை நட்சத்திரம் லியானா மற்றும் நடிகர்கள், நடிகைகள் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.
ஏழை, எளியவர்களுக்கு 51 நபர்களுக்கு கேக், உணவு, வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது. 6 குழந்தைகளுக்கு உடைகள் வழங்கப்பட்டது. எஸ்.டி.சுப்பிரமணியன், கவிஞர் ஜெய் வாணன், ஆசிரியர் முருகன், ராஜேந்திரன், பால் பாண்டி, ஸ்டெல்லா வின்ஸி ஆகியோர் வாழ்த்துக்கள் கூறினார்கள். அனைவருக்கும் கேக், வடை, தேநீர் வழங்கப்பட்டது.




