• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்..,

ByM.I.MOHAMMED FAROOK

Apr 24, 2025

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் மறைந்த போப் பிரான்சிஸ்க்கு அஞ்சலி செலுத்தினர்.

காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் இருந்து கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் உருவப்படத்துடன் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவத்தி ஏந்தி காரைக்காலில் முக்கிய வீதிகள் வழியாக மௌன ஊர்வலமாக சென்று மறைந்த போப் பிரான்சிஸ்க்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பங்குத்தந்தை பால்ராஜ் குமார் உள்ளிட்ட ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் தொடங்கிய மவுன பேரணி காரைக்காலில் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் புனித தேற்றரவு அன்னை ஆலயத்தில் நிறைவுற்றது.