• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கிறிஸ்தவமும் – பிராமணரும் இணையும் திரைப்படம்

நேச்சுரல் ஸ்டார்’ நானி, மற்றும் திறமையான இயக்குநரான விவேக் ஆத்ரேயா இருவரும் முதன்முறையாக இணைந்து உருவாக்கியிருக்கும் திரைப்படம் ‘அன்டே சுந்தரனக்கி’. இது தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் நடிகை நஸ்ரியா நசீம் தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார். இவரை தெலுங்கு திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிமுகப்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, இசையமைப்பாளர் விவேக், படத் தொகுப்பாளர் ரவிதேஜா கிரிஜாலா உள்ளிட்ட பல தொழில் நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இப்படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியிருக்கிறது.மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் இந்தப் படத்தின் தரம் படைப்பு, வணிகரீதியாகமுதன்மையானதாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
நிறைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட பிராமண குடும்பத்தில் பிறந்த ஒரேயொரு ஆண் வாரிசு என்ற கதாபாத்திரத்தில் நடிகர் நானி நடித்திருக்கிறார்.
ஒரேயொரு ஆண் வாரிசே இவர்தான் என்பதால் இவர் மீது குடும்பத்தினர் அனைவரும் அதீத அக்கறையும், அன்பையும் செலுத்துகிறார்கள். குடும்ப உறுப்பினர்கள் தன் மீது காட்டும் அதீத அரவணைப்பை தவிர்ப்பதற்காக ஜோதிடர்கள் கூறும் ஒவ்வொரு ஆலோசனையையும் பின்பற்ற வேண்டிய அழுத்தத்திற்கு சுந்தர் ஆளாகிறார். இதனால் அவருக்கு பல நெருக்கடிகள் ஏற்படுகிறது.
இத்தருணத்தில்தான் சுந்தர், லீலா தாமஸ் என்ற தன்னுடைய கிறிஸ்துவ தோழியை காண்கிறார். இவர்களின் சந்திப்பும், இதனால் இந்த இருவரின் குடும்பத்துக்குள்ளும் ஏற்படும் விளைவுகளும்தான் இந்தப் படத்தின் கதையாகும்.
இந்தப் படத்தின் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள், படத்தின் புதிய தகவலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் டீசரை படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த டீஸர், படத்தின் மீதான எதிர்பார்ப்பினை உயர்த்தியிருக்கிறது.
இந்தப் படம் தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரிலும், மலையாளத்தில் ‘ஆஹா சுந்தரா’ என்ற பெயரிலும் வரும் ஜூன் 10-ம் தேதியன்று ஒரே சமயத்தில் வெளியாகிறது.