• Thu. May 2nd, 2024

சோழவந்தான் தனியார் பள்ளியில் தேசிய ரோபோட்டிக்ஸ் போட்டியில், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள்

ByKalamegam Viswanathan

Jan 7, 2024

சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய ரோ போட்டிக்ஸ் போட்டியில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் முதல் இடத்தையும் ஒட்டுமொத்த பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ( VIT) காட்பாடி முக்கிய வளாகத்தில் ‘ஆட்டோமேட்டிக்’ கம்பெனி நடத்திய பள்ளி மாணவர்களுக்கான ஐந்தாவது “தேசிய ரோபோட்டிக்ஸ் போட்டி” (ரோபோட்டிகா – 24) நடைபெற்றது. இதில் ஏறத்தாழ 80 பள்ளிகளிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் 300 அணிகளாகப் பங்கு பெற்றனர். இதில் மதுரை சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப் பள்ளி – சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் 22 பேர் 11 அணியினராகப் பங்கு பெற்று “ரோபோ ஒர்க்கிங் மாடல்” மற்றும் “ரோபோ ரேஸ்” போன்ற படைப்புகளை அனைவரது முன்னிலையில் செய்து காட்டியதுடன் அதனைப் பற்றிய விளக்கங்களை மிக அருமையாக ஆங்கிலத்தில் விளக்கிக்கூறினர்.இதனை வி. ஐ. டி பொறியியல் துறைகளில் டாக்டரேட் பட்டம் பெற்ற 22 நடுவர்கள் மதிப்பீடு செய்தனர். இதில் பங்கு பெற்ற 11 அணிகளில் 8 அணிகள் வெற்றி பெற்றதுடன் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் முதல் இடத்தையும் ஒட்டுமொத்தப் பிரிவில்( ஓவர் ஆல் சாம்பியன்ஷிப்) இரண்டாம் இடத்தையும் பெற்று அப்பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். தொடர்ந்து சிறந்த கற்றல் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி தலைவர் டாக்டர் செந்தில்குமார், தாளாளர் குமரேசன் நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்கள் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *