• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில்.., பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழா..!

ByKalamegam Viswanathan

Apr 4, 2023

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத வளர்பிறை  பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு  சனீஸ்வரன் லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும்  பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகத்தை  பரசுராம சிவாச்சாரியார், ஐயப்பன் செய்தனர். பின்னர் சுவாமியும் அம்மனும் ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் திருக்கோவிலை வலம்வந்து சிவாய நமக சிவாய நமக என்று சொல்லி வந்தனர். சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடைபெற்றது. தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிஜேபி விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர், எம் வி எம் குழும தலைவர் மணிமுத்தையா,நிர்வாகி வள்ளிமயில், எம் வி எம் தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் லயன் டாக்டர்.மருது பாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவிலிலும் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவாலயங்களிலும் பிரதோஷ விழா நடைபெற்றது.