• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் மன்னாடிமங்கலம் கல்லாங்காடு முத்தையாசாமி மாரியம்மன் கோவில் மண்டல பூஜை

ByN.Ravi

Jul 11, 2024

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமம் கல்லாங்காடு பகுதியில் உள்ள முத்தையா சாமி மற்றும்மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா மே 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு மண்டல பூஜை வரதராஜ பண்டிட் தலைமையில் யாக பூஜை புனித நீர் குடங்களை எடுத்து வலம் வந்தனர். இதைத் தொடர்ந்து முத்தையா சுவாமி மாரியம்மன் உள்பட பரிவார தெய்வங்களுக்கு பால்,தயிர் உட்பட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று மகா அபிஷேகம் நடந்தது.
இதில் பாஜக விவசாய அணி மாநிலத்துணைதலைவர் எம்விஎம் மணிமுத்தையா, சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் வள்ளி மயில், 8வது வார்டு கவுன்சிலர் அரிமா சங்கத்தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
காடுபட்டிபோலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.