• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் எம். வி. எம் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி உறுதிமொழி!

ByKalamegam Viswanathan

Nov 7, 2023

சோழவந்தான் எம். வி. எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சோழவந்தான் தீயணைப்புத்துறை சார்பில் விபத்திலா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளரும் சோழவந்தான் அரிமா சங்க தலைவருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் செல்வம் முன்னிலை வகித்தார். சோழவந்தான் தீயணைப்பு நிலைய எழுத்தர் பெரியசாமி வரவேற்றார். தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு கண்ணன் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பாதுகாப்புடன் வெடிப்பது குறித்து ,ஆலோசனைகள் வழங்கினார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.