• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழா

ByKalamegam Viswanathan

Mar 23, 2023

சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,
ஜெனக நாராயண பெருமாள் கோவில் விழாவை முன்னிட்டு விஸ்வக்சேனர் புறப்பாடு நடந்தது உபயதாரர் கோச்சாயி ஐயர் குமாரர் ரவிக்குமார் யாகசாலை மண்டபத்தில் ரெகுராம பட்டர் ஸ்ரீ பதி பட்டர் ஆகியோர் தலைமையில் யாகவேள்வி நடந்தது இதைத் தொடர்ந்து திருவிழா கொடி மேளதாளத்துடன் நான்கு ரத வீதியும் பவனி வந்து கோவில் முன்பாக கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்று விழா நடந்தது இரவு அன்ன வாகனத்தில் சுவாமி பலவருதல் நடைபெறும் உபயதார் கன்னியப்பன் முதலியார் செயல் அலுவலர் சுதா கோவில் பணியாளர்கள் முரளிதரன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர் வருகிற 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் திருக்கல்யாண விழா நடைபெறும் தினசரி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் தினமும் மாலை சக்கரத்தாழ்வார் புறப்பாடும் நடைபெறும்..