• Sun. Jan 25th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் எழுது பொருட்கள் வழங்கும் விழா

ByN.Ravi

Jul 5, 2024

சோழவந்தனைச் சேர்ந்த எல்ஐசி அலுவலர் முத்துராமன், ஆசிரியர் ஜோயல்ராஜ் ஆகிய இருவரும் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மாணவ, மாணவிகளுக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நோட்புக், பேனா, பென்சில் உட்பட எழுது பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
இதே போல், இந்த ஆண்டும் சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில், 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்களுக்கு தேவையான நோட்டுகள், பென்சில்கள், ரப்பர்
போன்ற அனைத்து எழுது பொருட்கள் வழங்கு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் எபினேசர் துரைராஜ் நிகழ்ச்சிக்கு, தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் அனைவரையும் வரவேற்று பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் எழுதுபொருட்கள் அனைத்தும் பள்ளிக்கு எல்ஐசி வளர்ச்சி அதிகாரி முத்துராமன், அரசு பள்ளி ஆசிரியர் ஜோயல்ராஜ் ஆகியோர் நன்கொடையாக வழங்கி சிறப்பு செய்தனர்.
இதில், வாடிப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலர் ஷாஜகான், அகிலத்து இளவரசி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுகள், எழுதுபொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். உதவிஆசிரியை பிரேமா, அன்னபுஷ்பம் நன்றி கூறினார்.