• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்..

Byகாயத்ரி

Mar 30, 2022

பிரபல தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று திரளான பக்தர்களுடன் நடைபெற்றது.

தஞ்சாவூரின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாள் தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்று, வரும் ஏப்ரல் 13ந் தேதி காலை 6.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் தியாகராஜர், ஸ்கந்தர், கமலாம்பாள் முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. பின்னர் அதேநாளில் காலை 7.30 மணிக்குள் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.