

தைவான் கடற்பகுதியில் சீனா போர் பயிற்சியை தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்துக்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து தைவானை சுற்றியுள்ள சீன கடல் எல்லையில் ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டு வருகிறது. அதில் தைவானை நோக்கி ஏவுகனை வீசி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருவதால், அங்கு போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.சீனாவின் ஏவுகணை பயிற்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
