• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தைவானுக்கு சீனா அனுப்பிய
43 போர் விமானங்கள்

தைவானை நோக்கி 43 போர் விமானங்களை அனுப்பிய சீனா, போர்ப்பயிற்சிகளை நடத்துகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 43 சீன விமானப்படை விமானங்கள் தைவான் ஜலசந்தியின் எல்லையை கடந்ததாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. உரிமை கோரும் தீவுக்கு அருகில் சீனா தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. தைவானைத் தனது சொந்தப் பகுதி எனக் கூறும் சீனா, நேற்று தைவானைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் போர்ப்பயிற்சி நடத்தியதாகக் கூறியது. சீனாவின் கோரிக்கைகளை கடுமையாக நிராகரிக்கும் தைவான், சீனா பிராந்திய அமைதியை அழித்து தைவானின் மக்களை சிக்கவைக்க முயற்சிப்பதை இந்த பயிற்சிகள் காட்டுவதாக கூறி உள்ளது. தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய வரைபடத்தின்படி, சமீபத்திய ஊடுருவலில் ஈடுபட்டுள்ள ஜெட் விமானங்கள், அதிகாரப்பூர்வமற்ற தைவான் ஜலசந்தியின் சராசரி எல்லை கோட்டைக் கடந்தன. தைவான் அருகே ஏழு சீன கடற்படைக் கப்பல்களும் நிறுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன விமானங்களை எச்சரிக்க தைவான் போர் விமானங்களை அனுப்பி உள்ளதாக தைவான் அமைச்சகம் கூறி உள்ளது.