• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குழந்தைகளின் பாதங்களை பதம் பார்க்கும் இரும்பு சறுக்கு மரம்..!

ByKalamegam Viswanathan

Jan 19, 2024

மதுரை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள ராஜாஜி பூங்காவில் சிறுவர்களுக்கான பூங்காவில் குழந்தைகள் விளையாடும் சறுக்கு மரம் குழந்தைகளின் பாதங்களை பதம் பார்க்கும் வகையில் அமைந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மதுரையில் சிறுவர்களுக்கான பூங்காக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது இதில், காந்தி மியூசியம் மதுரை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள ராஜாஜி பூங்காவில் குழந்தைகள் ஆவலுடன் விளையாடும் சறுக்கு விளையாட்டில் உள்ள தகரம் உடைந்து இருக்கிறது. மேலும் குழந்தைகள் தெரியாமல் அதில் ஏறி விளையாடும் பொழுது தகரம் உடைந்து தூக்கிய நிலையில் உள்ளது. இதனால், குழந்தைகளுக்கு காயம் ஏற்படுகிறது மாநகராட்சி பூங்கா ஊழியர்களிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். பணம் மட்டும் கறாராக வசூலிக்கும் மாநகராட்சி நிர்வாகம் பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பாகங்களை உடனடியாக சரி செய்து குழந்தைகளுக்கு எந்த காயங்களும் ஏற்படாமல் விளையாடுவதற்காக வழிவகை செய்ய வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.