• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சரின் பசும்பொன் பயணம் ரத்து

ByA.Tamilselvan

Oct 29, 2022

மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பசும்பொன் செல்லும் முதலமைச்சரின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நாளை நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (சனிக்கிழமை) மாலை மதுரை செல்ல ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதுகுவலி காரணமாக முதலமைச்சர் நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். நீண்ட பயணங்களை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.