• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கட்டத்தேவன் பட்டியில் முதலமைச்சரின் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

ByP.Thangapandi

Feb 17, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அருகே வேப்பனுத்து ஊராட்சியில் அமைந்துள்ள வே.கட்டத்தேவன்ப்பட்டியில் நாடார் மகாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட தன்னார்வலர் மாணவர்களின் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் 17-02-2024 அன்று நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.M.ராஜேஸ்வரி முத்துராமன் தலைமையில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் வழங்கப்பட்டது . இம்முகாமில் பேராசிரியர்கள் A.அன்சாரி ,M.ஆனந்த் மற்றும் S.ரஞ்சித் அணிகள் 14, 203 மற்றும் 219 கண்காணிப்பில் தன்னார்வலர் மாணவர்கள் வே.கட்டத்தேவன்பட்டியில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் பற்றி விழிப்புணர்வும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்தக்கூடிய உணவு பழக்கங்களையும் கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்கள் இந்த இலவச முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்று மகிழ்ச்சி பெற்றன.

இந்த முகாமில் லட்சுமணா மருத்துவமனை சார்பில் மருத்துவர் – விஜயராஜ், முரளி கிருஷ்ணன், பார்த்தீபன் தலைமையிலான செவிலியர்கள், மருத்துவ குழுவினர் கலந்து பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.