

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி இன்று ஏழை -எளிய மக்கள் கட்டணமின்றி உயர் சிகிச்சைகளை பெறுவதற்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் பேருதவி புரிந்து வருகிறது.
இந்நிலையில் திருக்குவளை மற்றும் திருபூண்டியைச் சேர்ந்த 8 தூய்மைப் பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான அடையாள அட்டையை வழங்கினார்.

இந்நிகழ்வில் அமைச்சர் டி. ஆர். பி. ராஜா, தமிழ்நாடு தாட்கோ தலைவர் முன்னாள் அமைச்சர் உ. மதிவாணன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் இ.ஆ.ப., துறை சார்ந்த அரசு அதிகாரிகள்
கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



