• Mon. Apr 29th, 2024

எம்.பி விஜய்வசந்த் தலைமையில்.., பி.எஸ்.என்.எல் ஆலோசனை கூட்டம்!

நாகர்கோயில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் வைத்து பி. எஸ். என். எல். தொலைபேசி தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தலைமையில் நடைபெற்றது.

   இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை பொதுமேலாளர் எழில் சைமன் வரவேற்புரையாற்ற பொது மேலாளர் பிஜுபிரதாப் அறிமுக உரையாற்ற, துணை பொது மேலாளர் விஜயன் விளக்க உரையாற்றினார். இந்த அலோசனை கூட்டத்தில் உரையாற்றிய எம்.பி.விஜய்வசந்த்  மொபைல் சிம் கார்டு விற்பனை அதிகரித்து உள்ளதற்கு  பாராட்டு தெரிவித்தார். வாடிக்கையாளர்கள்  அதிக அளவில் வெளியேற காரணமான குறைகளை அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். மேலும் பரவலாக பி.எஸ்.என்.எல் சிக்னல் குறைவாக உள்ளதால், பலர் வேறு இணைப்புகளுக்கு செல்லும் நிலமை ஏற்பட்டுள்ளதையும் அவர் சுட்டி காட்டினார். இவற்றை விரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்த வருட இறுதிக்குள் அதிக அலைவரிசை கோபுரங்கள் அமைத்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 4G சேவைகள் மக்களுக்கு கிடைக்க செய்யவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்த அலோசனை கூட்டத்தில் உறுப்பினர்கள் பகவதி பெருமாள், பால்ராஜ், அன்பழகன், ஆரோக்கிய ராஜன், சஹானா, துரை, அந்தோணி ராஜேஷ் மற்றும் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் உட்பட பி. எஸ். என். எல் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *