முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை புத்தகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை பயணத்தை சுயசரிதையாக எழுதியுள்ளார். அதில், தனது பள்ளி- கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டம், முதல் பொதுக்கூட்ட பேச்சு, திரையுலகில் கால் தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தின் தொடக்கம் என 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதி உள்ளார்.
இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். ‘உங்களில் ஒருவன்’ (பாகம்-1) புத்தகத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வெளியிட்டார்.
விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புத்தகத்தின் விலை
முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகம் 336 பக்கங்களைக் கொண்டது. விலை 500 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூம்புகார் பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது
பினராயி விஜயன்
தமிழர்களும், மலையாளிகளும் ஒரே மண்ணின் குழந்தைகள், நாங்கள் சகோதர, சகோதரிகள் கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது முதல் நபராக நிற்பவர் மு.க.ஸ்டாலின் என கூறினார். இளைஞரணி தலைவராக இருந்து மாநிலத் தலைவராக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின் என கூறினார். படிபடியாக முதலமைச்சராக உயர்ந்தவர் ஸ்டாலின் என பேசினார்.
உமர் அப்துல்லா
எப்படி இருக்க வேண்டும். எதை சாப்பிட வேண்டும். எந்த உடை அணிய வேண்டும் என்பது பற்றி முடிவெடுப்பது அவரவரின் உரிமை. இந்துவாக காவித் துண்டு போட வேண்டுமா? பொட்டு வைக்க வேண்டுமா? அல்லது இஸ்லாமியராக ஹிஜாப் அணிய வேண்டுமா, தாடி வைக்க வேண்டுமா என்பதைப் பற்றி அவரவர்தான் முடிவு செய்ய வேண்டும். மத அடையாளங்களைப் பின்பற்றுவது தனிமனித உரிமை. ஆனால், தற்போது மொழி, மதம், ஆடை, உணவு சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. இந்தியா ஒற்றுமையில் வேற்றுமை நிறைந்த நாடு. மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டவை என்ற கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் மக்களின் குரலை கேட்காமல் மாநிலம் பிரிக்கப்பட்டது. காஷ்மீருக்கு வந்த நிலை தமிழ்நாட்டுக்கோ, கேரளாவுக்கோ வராது என்பது என்ன நிச்சயம்? மக்களின் ஒப்புதல் இல்லாமல் ஜம்மு காஷ்மீரை பிரித்தனர். பல தலைமுறைகளை கடந்த சொந்தம் ஜம்மு காஷ்மீருக்கும் தமிழகத்திற்கும் இருக்கிறது. ஒரு ஆளுநர் தமிழகத்தை மூன்றாக பிரித்தல் ஏற்க முடியுமா?!” என்றார்.
தேஜஸ்வி யாதவ்
தமிழகத்தில் நிலவும் சமூக நீதி, ஒற்றுமையை காணும்போது மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. தமிழகத்தின் சமூக நீதிக் கொள்கையால் கவரப்பட்டு, பீஹாரில் அதனை நடைமுறைப்படுத்தியவர் எனது தந்தை லாலு பிரசாத் யாதவ். சமூக நீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழகம்தான் காரணம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள இந்த நூலைப் படிப்பவர்கள், அவரது அரசியலைப் பற்றி புரிந்துகொள்ள முடியும். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் உள்ளது” என்றார்.
கலகலபாக்கிய சத்யராஜ்
புத்தகம் வெளியீட்டுக்கு பின்னர் நடிகர் சத்யரா விழா வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழ்நாட்டுக்காகவும், தமிழுக்காகவும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உரையாற்றியது மெய்சிலிர்க்க வைத்தது. திராவிட கலாசாரப்படி அண்ணன், தம்பி என்றே அழைப்போம். அதன் வகையில் முதல்வர் ஸ்டாலினை அண்ணன் என்றும் ராகுல் காந்தியை தம்பி என அழைக்கிறேன் என சத்யராஜ் பேசினார்.
அப்போது இப்படிப்பட்ட முதல்வர் எங்களுக்கு கிடைக்கவில்லையே என ஆதங்கமாக கூறியிருந்தேன். ஆனால் இப்போது சிறந்த முதலமைச்சராக நம் தளபதி இருக்கிறார். இது மகிழ்ச்சியாக இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா, வைரமுத்து, கனிமொழி எம்.பி உள்ளிட்ட அனைவர் குறித்தும் பேசிய சத்யராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் பக்கத்தை படித்தபோதே அவ்வளவு ஆர்வம் தொத்திக்கொண்டது.
முத்தமிழறிஞர் கலைஞரோடு எனக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. பாலைவன ரோஜாக்கள், மண்ணின் மைந்தன் ஆகிய 2 படங்களில் அவரது வசனத்தில் நடித்திருந்தேன். கடைசிவரை தன் தந்தையை தலைவனாகவே எண்ணி வாழ்ந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக் கூறிய சத்யராஜ் “தந்தை ஒரு தலைவன்” நல்ல டைட்டில்ல எனக் கூறினார்.
பராசக்தி படத்தின் நினைவுகளையும், மிசா காலத்து நிகழ்வுகளையும் நினைவூட்டிய சத்யராஜ், ஒரு நபரை மனிதனாக மாற்றுவது தந்தை பெரியாரின் சமூக நீதியும், காரல் மார்க்ஸின் பொருளாதார நீதியுமே ஆகும் என்றும், நாம் மனிதர்களாக இருக்க வேண்டுமென்றால் மனிதாபிமானம் தேவை எனக் கூறியிருந்தார்.
வைரமுத்து
சிந்திப்பது, செயல்படுவது, களமாடுவது ஆகியவை மு.க.ஸ்டாலினின் குணம் என புத்தக வெளியிட்டு விழாவில் வைரமுத்து பேசினார்.
கடந்த 9 மாதங்களில் தமிழ்நாட்டை இந்தியாவே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது என கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனைகளை சொல்ல ஒரு நாவு போதாது என தெரிவித்தார். இந்தியா புருவம் உயர்ந்து பார்க்கும் ராகுல் காந்தி, பினராயி விஜயன், ஒமர் அப்துல்லா, தேஜஸ்வி ஆகிய பெருமக்களால் மேடை பெருமையுடன் நிற்கிறது என பேசினார்.

- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]
- பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணிசென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி […]
- குரங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்…லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 […]
- வெளியானது நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத் தேதி…நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் […]
- அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம்சிறுபான்மை மக்கள் நல கட்சி அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
- ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுதலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளுக்கு தொப்பி, கூல்டிரிங்க்ஸ் வழங்கிய […]
- புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள்மதுரை புது மண்டபத்தில் உள்ள கடைகளில் பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உலகப் […]
- மதுரை – தேனி விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு- கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கைமதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் […]
- காட்டுயானை தாக்கி டீக்கடைக்காரர் பலி!கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மகன் ஆனந்தகுமார்(வயது […]
- இன்று கருணாநிதி சிலையை-வெங்கையாநாயுடு திறந்து வைக்கிறார்சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்புசென்னை ஓமந்தூரார் அரசினர் […]