• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சைக்கிளில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை சைக்கிளில் சென்றபோது பள்ளி மாணவர் ஒருவருடன் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடற்தகுதி மற்றும் உடல்நலத்தில் அதிகம் கவனம் செலுத்துபவர். பணிகளுக்கிடையே சைக்கிளிங் செய்யும் விடியோவும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவும் அவ்வப்போது வெளிவரும். இதேபோல சனிக்கிழமை காலையும் அவர் சைக்கிளிங் மேற்கொண்டார். சைக்கிளிங்கின் போது சாலையோர டீ கடையில் நிறுத்திய முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்த பள்ளி மாணவருடன் உரையாடினார். இதன் வீடியோ சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவி வருகிறது.