• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆளுநருக்கு பரிசுக் கொடுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..

Byகாயத்ரி

Mar 16, 2022

தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திராவிடர் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க கோரி கடந்த 2007ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய சிறப்பு தீர்மானத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. இந்த தீர்மானம் அனுப்பப்பட்டு சுமார் 4 மாதங்களுக்கு பின் அதை ஆளுனர் நிராகரித்து தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து நீட்தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதாக கடந்த மாதம் தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவையில் மீண்டும் ஒரு மனதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது தொடர்பாக இந்த நாள் வரை அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவியை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். அப்போது நீட்தேர்வு விலக்கு மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.