• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு

Byமதி

Nov 7, 2021

சென்னை கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் ஞாயிறு காலை 5 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ந்தது.

சென்னையில் அதிகப்பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ கனமழைபதிவாகி உள்ளது. எம்ஆர்சி நகர், அண்ணா பல்கலைகழகம், வில்லிவாக்கம், பெரம்பூர், மீனம்பாக்கம், தரமணி, நந்தனம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ந்தது.

சென்னை பல இடங்களில் 10 செ.மீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின.

இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்களுடன் நேரில் ஆய்வு செய்தார். அதன்படி சென்னை, வேப்பேரி, பேரக்ஸ் ரோடு பகுதியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.