• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பளு தூக்கு போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற சென்னை ஐ.டி. பணியாளர் திலகவதி

ByKalamegam Viswanathan

Mar 22, 2025

பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில், சென்னை ஐ.டி., பணியாளர் திலகவதி 3 பதக்கங்கள் வென்று அசத்தினர் .

சென்னையில் அனைத்து பிரிவு பெண்களுக்காக நடத்தப்பட்ட பளு தூக்குதல் (பவர் லிஃப்டிங்) போட்டியில் பெண்கள் பலர் உற்சாகமாக கலந்து கொண்டனர் .

இந்தியாவில் முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், அனைத்து வயது பிரிவுகளிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில், சென்னையைச் சேர்ந்த ஐ.டி., பணியாளர் திலகவதி குமார், 3 தங்கப் பதக்கங்களை வென்று, ‘தமிழ்நாட்டின் ஸ்ட்ராங் வுமன்’ என்ற பெருமையைப் பெற்றார்.

69 கிலோ சீனியர் பிரிவில் பங்கேற்ற இவர், மொத்தம் 375 கிலோ எடையைத் தூக்கி, மூன்று தங்கப் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்தார். ஒரு குழந்தைக்கு தாயான இவர் குடும்பத் தலைவியும் கூட.

தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெண்கலப் பதக்கம், தென் இந்திய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம், மாநில அளவில் பல தங்கப்பதக்கங்கள் பெற்றவர் இவர்.

வெற்றி குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பெண்கள் எப்போதும் மனதளவில் வலிமையானவர்கள். ஆனால், அவர்கள் உடல் ரீதியாகவும் அதே அளவு சக்தியும் வாய்ந்தவர்கள் என்பதை உணர்வதற்கே பல காலம் பிடிக்கிறது. பல வருடங்களாக, அவர்கள் பலவீனமானவர்கள் என்ற ஒரு தவறான நம்பிக்கையின் கீழ் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

உண்மையில், அவர்களின் உடல் எல்லைகளை தாண்டி, பலம் மிக்கவர்களாக இருக்க முடியும். இதை பெண்கள் புரிந்து கொள்ள, பவர் லிஃப்டிங் போன்ற வலிமையான விளையாட்டுகளை ஒருமுறையாவது முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.