• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் உள்ளதா என ஆய்வு..,

ByNamakkal Anjaneyar

Nov 3, 2023

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் உள்ளதா என 50 க்கும் வாகனங்களில் ஆய்வு, 20க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்து காற்று ஒலிப்பான்கள் அகற்றி பறிமுதல் வட்டார போக்குவரத்து அலுவlலர் நடவடிக்கை.

பேருந்து நிறுத்தங்களில் நிற்காத பேருந்துகள் மீது புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என RTO தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து அதிகாரிகள் துறை உத்தரவிட்டதை தொடர்ந்து திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் பொறுப்பு சரவணன் உள்ளிட்ட அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் 50க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்தனர் இதில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது மேலும் தொடர்ந்து இதுபோல் காற்று ஒழிப்பண்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் எச்சரித்தார் அதேபோல் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தங்கள் கைகளில் தங்களது ஓட்டுநர் உரிமத்தையும் நடத்துனர் உரிமத்தையும் வைத்திருக்க வேண்டும் எனவும் பெயர் பேட்ச் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாமல் இருந்தால் நோட்டீஸ் கொடுத்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை எச்சரித்தார் இந்த நடவடிக்கையால் திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் தனியார் பேருந்துகளோ அரசு பேருந்துகளோ சமீப காலமாக ஈரோட்டில் இருந்து நாமக்கல், ஈரோடு ராசிபுரம், சேலம் திருச்செங்கோடு, என அனைத்து வழித்தடங்களிலும் ஓடும் பேருந்துகள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்லும் பட்சத்தில் அந்த பேருந்து குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர்
தெரிவித்தார்.