• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வடுகப்பட்டி ஊராட்சியில் இலவச வீடு கட்டுவதற்கான காசோலை

ByN.Ravi

Jul 5, 2024

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சியில் ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் சார்பாக, அந்த கிராமத்தை தத்தெடுத்து பயனளிகளுக்கு இலவசம் வீடு கட்டித் தரும் நோக்கில் ஒரு பயனாளிக்கு 7 லட்சம் விகிதம் முதல் தவணையாக 1.50 லட்சம் காசோலை ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் மேனேஜர்
அஜோஜோனி, வழங்கினார். இந்த நிகழ்ச்சியை, முன்னதாக சமயநல்லூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் கலந்து கொண்டு வரவேற்புரையாற்றினார். தங்களது கிராமத்திற்கு வருகை தந்த ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் நிர்வாகிகளையும் காவல்துறை அதிகாரிகளையும், கிராமமக்கள்
மலர் தூவி வரவேற்றனர். முடிவில் கிராம செயலாளர் பங்கஜவல்லி, நன்றி
கூறினார்.