• Fri. Jun 28th, 2024

அச்சு அடித்தார் போல கோலப்பொடியில் ஆங்கிலத்தில் எழுதி கலக்கும் 78 வயது மூதாட்டி சாத்தம்மை

ByG.Suresh

Jun 24, 2024

சாதாரணமாக பேனா கொண்டு பேப்பரில் எழுதும் போதும் பெரும்படிப்பு படித்த நபர்களின் கையெழுத்தோ கிறுக்கியது போல் யாரும் படிக்க முடியாத வண்ணம் இருக்கும். ஆனால் சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராமத்தைச் சேர்ந்த 78 வயது நிரம்பிய சாத்தமை என்ற மூதாட்டி வெறும் மூன்றாம் வகுப்பு வரை படித்து இவர் கோலப்பொடியில் ஆங்கில எழுத்து அச்சு அடித்தார் போல எழுதி அசத்தி வருகிறார்.

சிவகங்கைமாவட்டம் கல்லல் கிராமத்தில் பிறந்த இவர் தந்தை தனியார் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் தந்தை பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்யும் பொழுது பெங்களூரில் உள்ள தனியார் கான்வெண்டில் மூன்றாம் வகுப்பு வரை ஆங்கில வழி யில் படித்துள்ளார்.அந்தக் காலத்தில் பெண்களை அதிகம் படிக்க வைப்பதை விரும்பாத சமூகத்தில் இருந்ததால் அவர் மூன்றாம் வகுப்பிற்கு மேல் பெற்றோர்கள் படிக்க வைக்கவில்லை.இருப்பினும் அவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதிலும் சரளமாக எழுதுவதிலும் புலமைப் பெற்றுள்ளார். இவர் தனது சொந்த ஊர் கல்லல் அருகே உள்ள கண்டரமாணிக்கம் என்ற கிராமத்தில் தமது சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து மூன்று ஆண் குழந்தைகள்இருந்து வந்த நிலையில் தற்போது இவர்கள் மதுரையில் தனியாக வசித்து வருகின்றனர். இருப்பினும் குறைந்த வருமானத்தில் தங்களது குடும்பத்தை நடத்தி வருவதால்.இவர் தன் மகன்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்ற நோக்கத்துடன் தற்போது ஆங்காங்கே கோயில்களில் தங்கி கோயில்களுக்கு முன்பு கோலம் போட்டும், ஆங்கிலத்தில் சிந்திக்க கூடிய வார்த்தைகளை எழுதியும் யாசகம் பெற்று தனது பிழைப்பை நடத்தி வருகிறார்.தான் யாசகம் செய்து பிழைப்பு நடத்த விரும்பவில்லை ஏதாவது சிறிய வேலை யாராவது கொடுத்தால் கூட நான் அதை செய்து என் பிழைப்பை நடத்திக் கொள்வேன் என்று தனது இயலாத சூழலிலும் தன்னம்பிக்கை இழக்காமல் சிரித்த மலர்ந்த முகத்துடன் உள்ளார்.

78 வயது நிரம்பிய மூதாட்டி சாத்தமைக்கு ரேஷன் கார்டு ஆதார் கார்டு மற்றும் சொந்த வீடு இல்லாததால் முதியோர் உதவித் தொகையோ,அல்லது மகளிர் உரிமை தொகையோ எந்தவித அரசு சலுகையும் கிடைக்கவில்லை.தற்போது அவர் தமிழக முதல்வரிடம் வைக்கும் கோரிக்கை அரசு வழங்கி வரும் சலுகைகளான ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு மற்றும் சொந்தமாக சிறிய வீடு,முதியோர் உதவித்தொகை இவை மட்டுமே எதிர்பார்க்கிறார்.நல்ல வசதியான குடும்பத்தில் வாழ்ந்து இயலாத சூழலிலும் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்துவதை விரும்பாத இவர் அரசு மற்றவர்களுக்கு கொடுக்கும் சலுகைகளை எனக்கு கொடுத்தால் நானும் இறக்கும் வரை கௌரவமாக வாழ்க்கை நடந்தவேன் என கூறினார். அரசும்,அரசு அதிகாரிகளும் இந்த ஏழை தாய்க்கு உதவ முன் வந்தால் இறக்கும் வரையிலும் கௌரவமான வாழ்க்கை நடத்தி தனது வாழ்க்கை பயணத்தை தொடர்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *