• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம்…

Byகாயத்ரி

Mar 22, 2022

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. கடந்த நான்கரை மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தன.இந்நிலையில், 137 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.58 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி எரிவாயு சிலிண்டர் விலை 965 ரூபாய் 50 காசுகளாக உள்ளது.