மதுரை ஆரப்பாளையம் மெயின் ரோடு சோனை கோவில் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் 75 ஆம் ஆண்டு உற்சவ விழா ஜூலை 25ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் தொடக்க நிகழ்வாக உமா மகேஸ்வரி ஸ்ரீ மகா சக்தி குழுவினரின் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் விளாங்குடி ராயல் பள்ளிகள் சேர்மன் ராஜாராம்,தாளாளர் சகிலாதேவிராஜாராம், கெவின்குமார் மற்றும் திமுக கவுன்சிலர்/ திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்து பெண்களுக்கு வளையல் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினர்.
தொடர்ந்து 2ம் நாள் நிகழ்வாக பால்குடம் அக்னி சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நேர்த்தி கடனை செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு விசேஷ பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் ராஜாராம் செயலாளர் பாண்டியன் பொருளாளர் சதீஷ்குமார் டிரஸ்டி சின்னையாதேவர் &சன்ஸ் அசோகன் கோவில் அர்ச்சகர்கள் முத்துக்குமரன், விக்னேஷ்குருநாதன் ஆகியோர் தலைமையில் விழா குழுவினர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்