• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

Byவிஷா

Oct 14, 2023

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாகத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.