• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Byவிஷா

Oct 18, 2023

தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், தேனி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதே போல், திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.