• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக் கூடாது – உயர்நீதிமன்றம்

Byவிஷா

Oct 22, 2021

கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில், அரியர் தேர்விற்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரியர் தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுமாரசாமி, ராம்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் அரியர் தேர்வு மாணவர்களுக்கு இரண்டு துணைத்தேர்வு நடத்தப்பட்டது.


அரியர் தேர்வுகளை ரத்து செய்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை. தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கவில்லை என தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், தேர்வு எழுதாமல், எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது என தெரிவித்ததுடன், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.