• Tue. Dec 10th, 2024

தேர்தலுக்குப் பின் செல்போன் கட்டணம் உயர வாய்ப்பு

Byவிஷா

Apr 12, 2024

மக்களவைத் தேர்தல் முடிந்த உடன், ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து மக்களை கவர்ந்து வருகின்றனர். எனவே, யார் வெற்றி பெறுவார் என தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆட்சி மாற்றம் வருமா? வராதா? என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டணம் 15சதவீதம் முதல் 17சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்போன் கட்டணம் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அந்த வகையில், இந்த ஆண்டும் கட்டணம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவன கட்டணங்களும் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.