சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரத்தில் செயல்பட்டு வரும் பிரபல சூப்பர் மார்கெட்டில் நடந்த செல்போன் திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொருட்கள் வாங்குவது போல் கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், கடையில் யாரும் கவனிக்காத நேரத்தை பயன்படுத்தி கவுண்டரில் இருந்த செல்போனை திருடிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
பின்னர் செல்போன் காணாமல் போனதை கண்ட கடை ஊழியர் மணிகண்டன் (21), சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது அந்த நபர் செல்போனை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளுடன் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் சேலையூர் போலீஸார் சி.எஸ்.ஆர் பதிவு செய்து, செல்போனை திருடிச் சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.




