உசிலம்பட்டி அருகே கிராமத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் நோக்கில் காவல்துறை வழிகாட்டுதலோடு, பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொறுத்திய இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி கணவாய் இறக்கத்தில் அமைந்துள்ளது இக்கிராமம்.
தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள இக் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தவிர்க்கவும், கிராமத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கவும் கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து காவல்துறை உதவியுடன் சிசிடிவி கேமராக்களை பொறுத்தி கண்காணிக்க முடிவு செய்தனர்.

இந்த இளைஞர்கள் தங்களால் இயன்ற நிதி மற்றும் கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேல் நிதி திரட்டி சுமார் 11 சிசிடிவி கேமராக்களை பேருந்து நிறுத்தம், அரசு பள்ளி வளாகம் மற்றும் கிராமத்தின் முக்கிய வீதிகளில் பொறுத்தியுள்ளனர்.
இன்று இந்த கண்காணிப்பு கேமராக்களை உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் சேகர், பால்ராஜ் இணைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து குற்றங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்களை குறைக்கவும் கிராம மக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.