போடியில் தனியார் மதுபான கூடம் அமைக்க கூடாது என பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
தேனி மாவட்டம், போடி ராணிமங்கம்மாள் சாலை, கரட்டுபட்டி, தோட்டம் வாக்கர்ஸ் கிளப், சூல் இயற்கை அமைப்பு மற்றும் ரெங்கநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வழியில் அரசு மதுபான குடத்தை அகற்றிய இடத்தில் மீண்டும் தனியார் மதுபானக் கூடம் அமைக்க கூடாது என…
ஊஞ்சாம்பட்டியில் குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் இருப்பதாக குற்றச்சாட்டு…
தேனி மாவட்டம், ஊஞ்சாம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணி நகர் பகுதி கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் மேல் நிலை தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். மணி நகர் பகுதியில்…
தேனி ஜமீன்தார் காம்ப்ளக்ஸ் வணிக வளாகத்தில் மதுக்கடை அமைக்க கூடாது என வணிகர்கள் கோரிக்கை
ஜமீன்தார் காம்ப்ளக்ஸ் வணிக வளாகத்தில் மதுபான கடை அமைவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி -மதுரை ரோட்டில் அமைந்துள்ள ஜமீன்தார் காம்ப்ளக்ஸ் வணிக…
தேனி பஞ்சமி நிலத்தில் வேலி அமைத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிவு
தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் பஞ்சமி நிலம் சர்வே எண் 190, 190/1 எண்ணியில் சுமார் 4 ஏக்கர் 90 செண்ட் நிலம் உள்ளது. இந்த பஞ்சமி நிலத்தை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த நிலையில் பஞ்சமி நிலத்தில் சுமார்…
தேனி மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் உள்ளே நகையை மீட்டுத் தரக்கோரி பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சி
தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளே நகையை மீட்டுத் தரக் கோரி பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆண்டிப்பட்டி தாலுகா மூலக்கடை கிராமத்தைச் சேர்ந்த லிங்கராஜ் மனைவி நிரஞ்சனா…
இரண்டு விவசாய நிலங்களில் கனிம வளங்கள் கொள்ளை கண்டுகொள்ளாத புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள்
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் குவாரிகள் மீது தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. அனுமதி வாங்கிய இடங்களை விட்டுவிட்டு அனுமதி பெறாத இடங்களில் கனிம வளங்கள் கொள்ளை நடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு.…
ஆண்டிபட்டியில் குறுகிய தெருவில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி உயர்அழுத்த மின்லைன் அமைத்த மின்சார வாரியம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் காந்திநகர் காலனி 4வது தெரு குறுகிய தெருவாக உள்ளது. இத்தெருவின் பின்புறம் எச்.டி லைன் செல்லும் பாதையில் ஒருவர் வீடு கட்டியுள்ளார். அவர் எச்.டி லைனை மாற்ற மின்சார வாரியத்திற்கு மனு கொடுத்துள்ளார். குறுகிய தெருவான…
தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம்
பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மை பணியாளர்கள் அரசு அறிவித்த தினக்கூலி 609 ஐ வழங்கிட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 2ம் நாளான இன்று தொடர்…
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பாக தமிழகத்தில் தொடரும் பட்டியல் ஜாதி இளைஞர்கள், செயல்பாட்டாளர்கள், தலைவர்கள், கொலைகளை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியல், பழங்குடி சாதி மக்கள் மீதான வன்கொடுமைகளின் எஸ்சி எஸ்டி சட்டத்தில் முறையாக பயன்படுத்தி…
தானியங்கி மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திறப்பு
தேனி மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் நெகிழிப்பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தானியங்கி மஞ்சப்பை வழங்கும் விற்பனை இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா திறந்து வைத்தார்கள். சர்வதேச நெகிழிப் பை இல்லா தினம்…








