
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள விஐபிகள் குடியிருப்பு பகுதியில், பட்டப்பகலில் தெருவில் நடந்து வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் பைக்கில் வந்த கொள்ளையர்கள் செயினை பறித்து சென்ற சம்பவம், அந்த பகுதியில் பெண்கள் மத்தியிலும், குடியிருப்புவாசிகள் மத்தியிலும் பதட்டத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிக்கு அருகே புற்று கோவில் விஐபி முதல் தெருவில் வசித்து வருபவர் ரம்யா தேவி வயது 68. நேற்று மதியம் இவர் தன்னுடைய மாட்டு கொட்டகை செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இரண்டு சக்கர வாகன பகல் கொள்ளையர்கள் மூதாட்டியை கீழே தள்ளி கழுத்தில அணிந்திருந்த தாலி சங்கிலி 8 பவுணை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதனால் மூர்ச்சை அடைந்த அந்த மூதாட்டி கதறி அழுது சத்தம் போட்டைதை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்த அனைத்து வீடுகளிலும் பெண்கள் உள்ளிட்ட எல்லோரும் வெளியே வந்து பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் .தகவலை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து வந்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். இதில் தெளிவாக இரண்டு சக்கர வாகன கொள்ளையர்கள் வந்து செயினை பறித்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூர் கிராமத்திலும் நடந்துள்ளது. இதே நபர்களே அந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது .எனவே கூடிய விரைவில் காவல்துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடிக்க எளிதாக இந்த சிசிடிவி காட்சிகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
