பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் அதிரடியாக கைது !
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் அதிபராக பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் உள்ளார். இவர் கடந்த 2022-ம் ஆண்டில், ரோட்ரிகோ…
நடுவானில் பரபரப்பு: நியூயார்க் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
மும்பையில் இருந்து நியூயார்க்கிற்கு வானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலால் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1.43 மணிக்கு நியூயார்க்கிற்கு ஏர் இந்தியா விமானம்…
இயக்குநர் ஷங்கரின் சொத்துக்கள் முடக்கம் – சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்திரன் திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறியுள்ளதாகக் கூறி அந்தப் படத்திற்குப் பெற்ற சம்பளத்தின் மூலம் ஷங்கர் வாங்கிய…
நடுக்கடலில் சிக்கிய கப்பலில் ரூ.80 கோடி போதைப்பொருள் பறிமுதல் !
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு…
திருடிய இருசக்கர வாகனத்தை சலுகை முறையில் விற்பனை… 10 டூ வீலர்கள் பறிமுதல்
சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சகாரியா.இவர் கடந்த 30.12.2024 அன்று தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து மருத்துவமனை வளாகத்தின் வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது அவரது வாகனம்…
திரைப்படம் எடுப்பதாக ரூ.6.50 லட்சம் பணமோசடி- பெண் இயக்குநர் மீது வழக்குப்பதிவு
திரைப்படம் எடுப்பதாக ரூ.6.50 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக கன்னட திரைப்பட பெண் இயக்குநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவேஸ்வராநகரைச் சேர்ந்தவர் பிந்து. மருத்துவரான இவர், கடந்த 2019-ம் ஆண்டு கன்னட சினிமா பெண்…
சிதறிய ஜன்னல் கண்ணாடிகள்- பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் பயங்கர குண்டுவெடிப்பு!
பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் மார்ச் 29-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 10-ம் தேதி முதல் தொடங்கப்படும்…
ராணுவ முகாமிற்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்- பாகிஸ்தானில் 9 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனாலும்,…
உ.பி ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 26 பேர் கைது- சிபிஐ அதிரடி!
உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 9 அதிகாரிகள் உள்பட 26 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 கோடியே 17 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், முகல்சாராயில் தலைமை லோகோ பைலட் பதவி…
‘அயன்’ படப்பாணியில் ரூ.10 கோடி போதைப்பொருள் கடத்திய பெண்!
‘அயன்’ படப்பாணியில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வயிற்றில் விழுங்கி கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு…