• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

முள்ளம் பன்றி வேட்டை வழக்கறிஞர்கள் நான்கு பேர் மீது வழக்கு

நாகர்கோவிலை சேர்ந்த நான்கு வழக்கறிஞர்கள் இளமுருகு, மார்த்தாண்டம்,சுப்பிரமணி,என்.ஜி.ஓ.காலணியை சேர்ந்த பெருமாள் பிள்ளை ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில். நான்கு பேர் மீதும் முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.இதனை கண்டித்து .வழக்கறிஞர்கள் போராட்டம்.
நாகர்கோவிலில் நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் வழக்கறிஞர் பாலஜனாதிபதி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.இதனால் நீதிமன்றம் முக்கிய சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில்.


குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் நீதிமன்றம் முன் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நான்கு வழக்கறிஞர்கள் முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில்.வனத்துறை அதிகாரிகளை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடை பெற்றது குறித்து.வடசேரி மாவட்ட தலைமை வனத்துறை அலுவலக அதிகாரிகள் இடம் விசாரித்தபேது கிடைத்த தகவல்கள்.


ஆரல்வாய்மொழி அருகேயுள்ள தெற்கு கருங்குளம் பகுதியில் முள்ளம் பன்றியை சிலர் வேட்டையாடி பிடிப்பதாக.மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து பூதப்பாண்டி வனச்சரக அதிகாரிகள்,வன ஊழியர்கள் கருங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படுபடி நின்ற இருவரை வன ஊழியர்கள் அணுகி விசாரிக்க முயன்ற போது இருவரும் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர்.இதனை கண்ட அதிகாரிகள் வாகனத்தில் விரைந்து சென்று இருவரை பிடித்து.அவர்கள் கையில் இருந்த சாக்கு பையை சோதனை இட்டபோது. சாக்கு பையில் ஒரு நாட்டு துப்பாக்கி மற்றும் ஒரு வெட்டு கத்தியும் இருந்ததாம். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது.ஒருவர் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் மற்றொருவர் ஜான் பெர்லின் என்பதும்.அந்த பகுதியில் முள்ளம் பன்றி ஒன்றை வேட்டையாடி பிடித்ததாக ஒப்புக்கொண்டவர்கள்.இவர்கள் இருவரிடமிருந்து கார் மற்றும் இருசக்கர வாகனம்,வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி,வெட்டுகத்தி ஆகிய வற்றை பறிமுதல் செய்ததுடன்.இருவரிடம் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இவர்களுடன் நான்கு வழக்கறிஞர்கள் உடந்தையாக இருந்தது தெரிய வந்த நிலையில்.சம்பந்தபட்ட நான்கு வழக்கறிஞர்களையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.


வழக்கறிஞர்கள் நான்கு பேரை கைது செய்த வனத்துறை அதிகாரிகளை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதி மன்றம் முன் போராட்டம் நடத்தியது குறித்து கோட்டார் காவல் நிலையத்தில். வழக்கறிஞர்கள் 60_பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் நான்கு பேரில் ஒருவரது இல்லம் அந்த பகுதியில் இருப்பதும்.முள்ளம் பன்றியை இருவர் பிடிப்பதை பார்த்து அவர்களை எச்சரித்த ஆத்திரத்தில்.முள்ளம் பன்றியை பிடித்ததற்கா கைது செய்யப்பட்டவார்களின் தவறான தகவலில் வழக்கறிஞர்கள் நான்கு பேர் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் என்ற கருத்தும் அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் தெரிவித்தனர்.
வழக்கறிஞர்கள் , வனத்துறை அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள இந்த வழக்கு பொது மக்களின் மத்தியிலும் ஒரு பேசு பொருளாக உலா வருகிறது.