• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலைய சம்பவத்தில் இபிஎஸ் உட்பட இருதரப்பினரின் மீது வழக்கு

ByKalamegam Viswanathan

Mar 12, 2023

மதுரை விமானநிலையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும்பொழுது அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் விமான நிலையத்தில் தரக்குறைவாக செயல்பட்டதாக நடந்த சம்பவத்தில் இரு தரப்பினர்மீதும் வழக்கு
நேற்று மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும்பொழுது அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் விமான நிலையத்தில் தரக்குறைவாக செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த புகாரின் பேரில் அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் மீது இரு பிரிவுகளின் 341, 294 கீழ் அபாசமாக தரக்குறைவாக பேசுதல், தாக்க முயற்ச்சி என் இருபிரிவுகளில் அவனியாபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.


இதே போல் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன் (வயது 42) அளித்த புகாரின் பேரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன், மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரீ கிருஷ்மூர்த்தியின் மகன் (அரவிந்தன்) ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி, தாக்குதல் செல்போன் பறிப்பு , காயம் ஏற்படும் வகையில் கொடூரமாக தாக்குதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.