• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்கு

ByKalamegam Viswanathan

Mar 22, 2023

வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஏழு பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு .
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட மேலநேசநேரி கிராமத்தில், நேற்று தாசில்தார் சுரேந்திரன் மற்றும் நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர் உட்பட 15க்கு மேற்பட்டோர் அரசு புறம்போக்கு நிலத்தை, நில அளவை செய்வதற்காக சென்றபோது, அவர்களை நில அளவை செய்ய விடாமல் வாக்குவாதத்தில்,அக்கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரத்தினசாமி உட்பட சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தாசில்தார் மற்றும் நில அளவையர்கள் அவ்விடத்திலிருந்து அலுவலகத்திற்கு திரும்பினர்.


இதனை தொடர்ந்து இன்று காலை கள்ளிக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் அலுவலகத்தில் நுழைந்து, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரத்தினசாமி உட்பட ஏழு பேர் வட்டாட்சியரை மிரட்டி மீண்டும் கிராமத்திற்குள் நில அளவை செய்ய வந்தால் காலை வெட்டுவதாகவும் மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சென்ற வீடியோ பதிவான நிலையில், அந்த வீடியோ பதிவை வைத்து கள்ளிக்குடி கிராம நிர்வாக அலுவலர் செல்வம் புகாரின் பேரில், கள்ளிக்குடி காவல் துறையினர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரத்தினசாமி மற்றும் வெள்ளைச்சாமி, துரைச்சாமி, பெரிய கருப்பன், சின்னசாமி, சேது நாராயணன், தன்னாசி ஆகிய ஏழு பேர் மீது கொலை மிரட்டல் மற்றும் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5பிரிவின் கீழ் (147, 448,294,353 506(2) IPC )வழக்கு பதிவு செய்துள்ளனர்.
(முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரத்தினசாமி அந்த கிராமத்தின் திமுக கிளைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது..