• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனத்தில் கார் மோதி, கூலி தொழிலாளி உயிரிழப்பு…

ByP.Thangapandi

Nov 28, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலபட்டி காளவாசல் அருகில் உசிலம்பட்டியிலிருந்து நக்கலப்பட்டி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது கேரளாவிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.,

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நக்கலப்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான கருப்பசாமி என்ற இளைஞர் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.,

இந்நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியிலேயே கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார்., தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலிசார் கருப்பசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையின் பிணவறைக்கு அனுப்பி வைத்து விட்டு இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,